தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மெட்ரோ ரயில் பயணம்! - மாற்று திறனாளிகளுக்காக இலவச மெட்ரோ ரயில் பயணம்

சென்னை: மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 250க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் சென்னை எழும்பூரிலிருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்தனர்.

மெட்ரோவில் பயணம் செய்த  மாற்றுத்திறனாளிகள்
மெட்ரோவில் பயணம் செய்த மாற்றுத்திறனாளிகள்

By

Published : Dec 2, 2019, 5:35 PM IST

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பாக காது கேளாத, வாய் பேச முடியாத உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் சென்னை எழும்பூரில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரயிலில் இலவசமாக அழைத்து செல்லப்பட்டனர்.

இதில் ஏராளமான மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் முதல்முறையாக மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டனர். மாற்றுத் திறனாளிகளும் எல்லா விதமான பணியும் செய்ய முடியும், எல்லா இடத்திற்கும் சென்று வர முடியும் என்கின்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் பொதுப் போக்குவரத்தில் மாற்றுத் திறனாளிகள் பயன்பாட்டிற்கான சிறப்பு வசதிகள் உள்ளதா என்று அறிய முடியும்.

மெட்ரோவில் பயணம் செய்த மாற்றுத்திறனாளிகள்

இதுதொடர்பாக அமர சேவா சங்கத்தின் செயலாளர் சங்கரராமன் பேசுகையில்:

எழும்பூரிலிருந்து விமான நிலையம் வரை இலவச மெட்ரோ ரயில் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருக்கும் குழந்தைகளுக்கு புதிய அனுபவம் கொடுக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மாலை சிறப்பு சினிமா காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்குள்ள கட்டமைப்புகள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் உள்ளதா என பரிசோதிக்கும் வகையிலும் இது தொடர்பாக எங்கள் கருத்துக்களை அலுவலர்களிடம் கூறும் வகையிலும் இந்த பயணம் அமையும் என கூறினார்.

இதையும் படிங்க: மண் சரிவால் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் பயணம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details