சென்னை கோடம்பாக்கம் பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று (ஜூலை 27) அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார். பின்னர், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரை அமைச்சர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கிவைத்தார். அதன்படி முதற்கட்டமாக பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிப் பகுதிகளில் (பெருநகர சென்னை மாநகராட்சி தவிர) வசிக்கும் 69 லட்சத்து 9 ஆயிரம் குடும்பங்களுக்கு 4 கோடியே 44 லட்சம் முகக்கவசங்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படவிருக்கின்றன.
'ஆகஸ்ட் 5 முதல் ரேஷன் கடைகளில் மாஸ்க் வழங்கப்படும்' - அமைச்சர் காமராஜ் - அமைச்சர் காமராஜ்
சென்னை: குடும்ப அட்டைதாரர்கள் முகக்கவசங்கள் பெற்றுக்கொள்ள ஆகஸ்ட் 1,3,4 ஆகிய தேதிகளில் டோக்கன் விநியோகிக்கப்பட்டு, ஆகஸ்ட் 5ஆம் தேதி முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசங்களை அனைவரும் பெற்றுக்கொள்ளலாம். ஆகஸ்ட் 1,3,4 ஆகிய தேதிகளில் வீட்டிற்கே சென்று முகக்கவசத்திற்கான டோக்கன் வழங்கப்படும். பின்னர் டோக்கனைக் கொண்டு சென்று 5ஆம் தேதி முதல் ரேஷன் பொருள்களுடன் முகக்கவசங்களையும் பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 2 முகக்கவசங்கள் வழங்கப்படும்”
இதையும் படிங்க:’இட ஒதுக்கீடு வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு செய்யாது’ - அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை