வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என்று சேலம் மாநகர காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு! - ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்
கோவை: ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி மாநகர காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிலையில், கோவை மாவட்டம் அண்ணா சிலை அருகில் மாநகர காவல்துறை, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ், கலாம் அறக்கட்டளை நேருநகர் அரிமா சங்கம் இணைந்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு, போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு ஹெல்மெட் வழங்கி, அதன் அவசியம் குறித்தும், ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை இயக்கக் கூடாது என்றும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
ஹெல்மெட் கட்டாயம் என்று அரசு தெரிவித்ததும், பலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுகின்றனர். அவர்களுக்கு அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று இலவச ஹெல்மெட் வழங்கப்பட்டதாக நிகழ்ச்சி ஒருகிணைப்பாளர் தெரிவித்தார்.