மதுரை: திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக இந்தப் பிரச்சனை நிலவி வருகிறது.
இதனை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், நேற்று (நவ.22) உள்ளூர் வியாபாரிகள் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி குறித்த அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, “கடந்த பத்தாண்டுகளாக கப்பலூர் சுங்கச்சாவடியில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என அனைத்துத் தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களின் பயன்பாட்டினைக் கருத்தில் கொண்டு அவர்களிடம் கட்டணம் வசூலிக்காமல் சுங்கச்சாவடிக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற எங்களது கருத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஏற்றுக் கொண்டது. உள்ளூர் மக்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம்” என்றார்.
இதையும் படிங்க: Audio Leak: திருச்சி சூர்யாவிற்கு வாய் பூட்டு போட்ட பாஜக; நடந்தது என்ன?