தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி

ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைக்க இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

one-lakh-farmers
one-lakh-farmers

By

Published : Sep 9, 2021, 9:48 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(செப்.09) காவல் துறை, தீயணைப்பு துறை, மீட்பு பணிகள் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது, வினாக்கள், விடைகள் நேரத்தின் போது கேள்வி எழுப்பிய சட்டப்பேரவை உறுப்பினர் மணிக்கண்னன், உளுந்தூர்பேட்டை தொகுதியில் விவசாயிகளுக்கு விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றும், 18 ஆண்டுகளாக விவசாயிகள் காத்திருப்பதால் விரைந்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 2021-22ஆம் ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 4 லட்சத்து 52 ஆயிரம் விவசாயிகள் மின் இணைப்புக்காக விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.

அதில் உளுந்தூர்பேட்டையில் உள்ள 4 ஆயிரத்து 554 விவசாயிகளும் பயனடைவார்கள். நடப்பு ஆண்டில் மட்டும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : கோடநாடு விவகாரம் - முதலமைச்சர் Vs எதிர்க்கட்சி தலைவர்

ABOUT THE AUTHOR

...view details