சென்னை:தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி கொடுப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், 6.5 லட்ச மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும் என தமிழ்நாடு அரச அறிவித்துள்ளது. அதன்படி நடப்பு ஆண்டில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.