சென்னை: பெருங்குடி அன்னை சத்தியா நகர் விரிவு, கலைஞர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன் (33).
இவர் குரோம்பேட்டை சந்திரன் நகர் முதல் தெருவில் உள்ள தனியார் தங்க நகை அடகு நிறுவனத்தில் ரீஜினல் ஹெட் ஆக வேலை செய்து வருகிறார்.
அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வேலையை விட்டு நின்ற சேலம் மாவட்ட கள்ளிப்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் மற்றும் அதே ஊரை சேர்ந்த ராஜேஷ் ஆகியோர் தனியார் தங்க நகை அடகு நிறுவனத்தில் நகை விற்க வரும் வாடிக்கையாளர்களிடம் பேசி மூளைச்சலவை செய்து அவர்களின் கூட்டாளிகளான ஆனந்த் (எ) விஜய் ஆனந்த் மற்றும் அருண் பிரசாத் ஆகியோருடன் சேர்ந்து இதுவரை சுமார் 6 கிலோ தங்க நகைகளை வாங்கி அதிக லாபத்திற்கு விற்று தனியார் தங்க நகை அடகு நிறுவனத்திற்கு ரூபாய் 20 லட்சம் வரையில் நஷ்டம் ஏற்படுத்தியதாக தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார்.
இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவிட்டதன் பேரில் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் இணை ஆணையாளர் மூர்த்தி தலைமையில் தாம்பரம் சரகம் உதவி ஆணையாளர் சீனிவாசன் நேரடி மேற்பார்வையில் நம்பிக்கை மோசடி செயலில் ஈடுபட்ட ஆனந்த் (எ) விஜய் ஆனந்த் (38), அருண் பிரசாத் (33), பிரகாஷ் (33) ஆகியோரை குரோம்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் நாஞ்சில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் சதிஷ்குமார் ஆகியோர் சேலம் மாவட்டத்தில் வைத்து கைது செய்து குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
பின்னர் விசாரனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை குரோம்பேட்டையில் தங்க நகை நிறுவனத்தில் மோசடி - மூன்று பேர் கைது - கைது
சுமார் 6 கிலோ தங்க நகைகளை வாங்கி அதிக லாபத்திற்கு விற்று தனியார் தங்க நகை அடகு நிறுவனத்திற்கு ரூபாய் 20 லட்சம் வரையில் நஷ்டம் ஏற்படுத்தியதாக தாம்பரம் மநாகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஞானசேகரன் புகார் அளித்து இருந்தார்.
சென்னை குரோம்பேட்டையில் நகை நிறுவனத்தில் மோசடி - மூன்று பேர் கைது