தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சபரீசன் பெயரை சொல்லி ரூ.77 லட்சம் மோசடி செய்ததாக திமுக ஊராட்சி மன்ற தலைவர் புகார்

தமிழ்நாடு முதலமைச்சரின் மருமகன் சபரீசனின் பெயரை பயன்படுத்தி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவி வாங்கி தருவதாக கூறி 77 லட்சம் மோசடி செய்ததாக ஊராட்சி மன்ற தலைவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சபரீசன் பெயரை சொல்லி 77 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளித்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்...
சபரீசன் பெயரை சொல்லி 77 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளித்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்...

By

Published : Oct 27, 2022, 11:02 PM IST

சென்னை: திருப்புத்தூர் மாவட்டம் நரியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாரதி. இவர் ஊராட்சி மன்ற தலைவராகவும், கடந்த 10 வருடமாக அதே பகுதியில் திமுக கவுன்சிலராகவும் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவி வாங்கி தருவதாக கூறி பாரதியிடம் 77 லட்ச ரூபாய் பெற்று புவனேஷ் என்கிற சரவணன் மற்றும் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட போலி ஐஏஎஸ் சசிகுமார் ஆகியோர் திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாக இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாரதி,

“திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறேன். ஏற்கனவே திமுகவில் எம்எல்ஏ சீட்டு கேட்டு முயற்சி செய்த போது கிடைக்கவில்லை. அதன் பிறகு வேலூர் மாவட்டத்தில் ஹோட்டல் நடத்திவரும் அதிமுகவை சேர்ந்த பாலச்சந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டு, அவர் மூலமாக புவனேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோர் அறிமுகமாகினர்.

ஊராட்சிமன்ற தலைவர் பாரதியிடம் பணம் கேட்கும் ஆடியோ...

அவர்கள் எம்எல்ஏ சீட்டு கிடைக்கவில்லை என்றால் என்ன, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவி காலியாக இருக்கிறது, அதனை உங்களுக்கு வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறி, இந்த பதவி வேண்டுமென்றால் ஒரு கோடி ரூபாய் செலவாகும் என அவர்கள் தெரிவித்தனர்.

ஊராட்சிமன்ற தலைவர் பாரதி அளித்த பேட்டி

இதனை ஒப்புக்கொண்டு 34 லட்ச ரூபாயை சென்னை ஹோட்டலில் வைத்து புவனேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமியிடம் கொடுத்தேன். இதற்கிடையே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியை வாங்கி தரப்போவதாக ஐஏஎஸ் சசிகுமார் என்பவரை அறிமுகம் செய்து வைத்து அவரை டெல்லியில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் சந்தித்து ஒரு தொகை கொடுத்தேன்.

மொத்தம் 77 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளேன், முதலமைச்சரின் மருமகன் தான் பதவி போட உள்ளார் என அவர்கள் கூறினர். அவர்களை சந்திக்கும் போதெல்லாம் பாண்டிச்சேரி முதலமைச்சரின் புகைப்படம் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எடுத்த புகைப்படத்தை என்னிடம் காண்பித்தனர்.

பல மாதங்களாக பதவி கிடைக்காமல் இழுத்தடித்து வந்ததால் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது பணம் தர முடியாது என புவனேஷ் கொலை மிரட்டல் விடுத்தார். அதன் பிறகு விசாரித்த போது சசிகுமார் போலி ஐஏஎஸ் மோசடி வழக்கில் சிறையில் இருப்பது தெரியவந்தது. இதனால் உடனடியாக பணத்தை மீட்டு கொடுக்கும் படி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததாக” கூறினார்.

ஏற்கனவே சசிகுமார் என்பவர் ரயில்வே, அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திருவள்ளூர் ராகவேந்திரர் கோயில் சிலைகள் கொள்ளை வழக்கு... 2 பேர் கைது...

ABOUT THE AUTHOR

...view details