தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு பேருந்து மோதியதில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் சேதம்! - accident news today

சென்னையில் அரசு பேருந்து மோதியதில் நான்கு வாகனங்கள் சேதமடைந்தது மட்டுமல்லாமல், ஒரு பெண் காயமடைந்துள்ளார்.

அரசு பேருந்து மோதியதில் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் சேதம்!
அரசு பேருந்து மோதியதில் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் சேதம்!

By

Published : Nov 28, 2022, 4:24 PM IST

சென்னை: அண்ணா சதுக்கத்திலிருந்து தடம் என் 2ஏ என்ற அரசு பேருந்து கண்ணதாசன் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சென்ட்ரல் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சிக்னலில் நின்றுக் கொண்டிருந்த கார் மீது மோதியது. இதனையடுத்து அந்த கார் அடுத்தடுத்த வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மூன்று கார்கள் மற்றும் ஒரு ஆட்டோ சேதமடைந்தது. மேலும் இந்த விபத்தில் காயமடைந்த ஒரு பெண், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே இச்சம்பவம் குறித்து அறிந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க:தஞ்சையில் வயலில் இறங்கிய பள்ளி வேன்: 7 குழந்தைகள் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details