நேற்றிரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் குற்ற நுண்ணறிவு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது, விசாகப்பட்டினத்திலிருந்து வந்த ரயிலில் பயணம் செய்த, தேனி மாவட்டத்தை சேர்ந்த கணேசன் என்பவரின் உடைமைகளை சோதனையிடும் போது 44கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது.
எழும்பூர் ரயில்நிலையத்தில் 44கிலோ கஞ்சா பறிமுதல் - பெண்கள் உட்பட 4பேர் கைது - போதை பொருள் தடுப்பு பிரிவினர்
சென்னை : விசாகப்பட்டினத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு 44கிலோ எடையுள்ள கஞ்சாவை கடத்தி வந்த மூன்று பெண்கள் உட்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர், அவரை பிடித்து விசாரிக்கையில் அவருடன் ரயிலில் பயணித்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாத்திமா சலீம்(66), சசிகலா(38) பாண்டீஸ்வரி(35) ஆகிய மூன்று பேரும் கணேசனுக்கு கடத்தலில் உதவியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு வந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், அவர்கள் நான்கு பேர் மீதும் போதைப்பொருள் கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.