சென்னை:எண்ணூரில் உள்ள நேதாஜி நகர் சுனாமி குடியிப்பில் வசித்து வந்தவர் சூர்யா (எ) கேரளா சூர்யா. இவர் சென்னை காசிமேட்டு பகுதியில், மீன்பிடி தொழில் செய்து வருகிறார். மேலும் இவர் காசிமேடு காவல் நிலைய பதிவேடு குற்றாவளியாக கருதப்படுகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத 4 நபர்கள் அங்கு நின்றுக் கொண்டிருந்த சூர்யாவை எதிர்பாராத நேரத்தில், கத்தி மற்ற்றும் கருங்கல்லால் கடுமையாக தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.
அந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சூர்யாவை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கபட்டது. மேலும், இதுகுறித்து சூர்யாவின் மனைவி பிரியங்கா, மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் துறைமுக போலீசார் நடத்திய விசாரணையில், காசிமேடு பகுதியை சேர்ந்த சந்தோஷ்(30), இயாயபுரம் பகுதியை சேர்ந்த நிசாந்தன்(28), திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த லோகேஷ்(20) மற்றும் எர்ணாவூர் பகுதியில் சேர்ந்த குணசேகரன்(20) ஆகிய 4 நபர்களை துறைமுக போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 2 பட்டா கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து நடத்திய விசாரணையில், நிசாந்தன் என்பவர் முன்விரோதம் காரணமாக தனது நண்பர்களுடன் சேர்ந்து, சூர்யாவை கத்தி மற்றும் கல்லால் தாக்கியது தெரியவந்துள்ளது. மேலும் சந்தோஷ் என்பவர் மீது ஏற்கனவே 1 கொலை வழக்கு உட்பட 3 குற்ற வழக்குகள் உள்ளது.
அதேபோல நிசாந்தன் மீது 1 கொலை வழக்கும், லோகேஷ் மீது 1 அடிதடி வழக்கு உட்பட 2 குற்ற வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூர்யா நேற்று முன்தினம் மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சூர்யா இறந்த காரணத்தினால், மேற்படி கொலை முயற்சி வழக்கு, தற்போது கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட 4 பேர் கொண்ட கும்பலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீராங்கனைகளுக்கு விசா வழங்க சீனா மறுப்பு! கிரண் ரிஜிஜூ கண்டனம்!