'இதயங்களை இணைப்போம்' என்ற தலைப்பில் திமுக சிறுபான்மையினர் அணி சார்பாக சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாநாடு நடைபெற்றது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர் மொய்தீன், இந்திய யூனியன் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவஹிருல்லா உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
'இதயங்களை இணைப்போம்' மாநாடு இந்த மாநாட்டில் தலைமை உரையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின், "சட்டப்பேரவைத் தேர்தலில் இடம்கொடுப்பது என்பதைத் தாண்டி நமது உணர்ச்சி, கொள்கைதான் முக்கியம். எவ்வளவு இடங்கள் என்பதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. நாம் ஆட்சி அமைக்க வேண்டும்.
வேறு வேறு நம்பிக்கை நம்மிடம் இருந்தாலும் நாம் அனைவரும் தமிழர்கள் என்பதை மறக்கக் கூடாது. இதை உணர்ந்தால் நம்மை யாரும் பிரிக்க முடியாது, வீழ்த்த முடியாது. நல்லாட்சி மலரக் கூடாது என்று நாட்டு மக்களைப் பிரிக்கின்றனர். இதயங்கள் இணையக் கூடாது என்று சிலர் சதி செய்கின்றனர், இன்னும் நான்கே மாதம்தான் நல்லாட்சி மலரும்.
'இதயங்களை இணைப்போம்' மாநாட்டில் உரையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின் பக்தியை அரசியல் வியாபாரம் ஆக்கிவருகின்றனர். மக்களின் ஆன்மிகத்தைத் தூண்டிவிடுகின்றனர். அரசியல் ஆன்மிகம் பற்றி வேறுபாடு நன்கு அறிந்தவர்கள் மக்கள், அவர்களை ஏமாற்ற முடியாது. சிறுபான்மையினரின் அச்சுறுத்தல் பாஜக, அதிமுகதான்.
'இதயங்களை இணைப்போம்' மாநாட்டில் உரையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின் ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லாத பாஜகவை அதிமுக ஆதரித்துவருகின்றது. குடியுரிமைச் சட்டம், காஷ்மீர் 370 பிரிவு நீக்கம், முத்தலாக் உள்ளிட்ட சட்டங்களை அதிமுக ஆதரித்து அண்ணாவிற்குத் துரோகம் செய்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்தது பெரிய தவறு என்று ஜெயலலிதா மன்னிப்புக் கேட்டார்.
குடியுரிமைச் சட்டத்தை அதிமுக ஆதரித்ததன் மூலம் சிறுபான்மையினர், தமிழர்களுக்கு இரட்டைத் துரோகம் செய்துவிட்டது. விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். அப்படிப்பட்ட விவசாயிகளுக்கு எதிரான சட்டம்தான் புதிய வேளாண் சட்டம்.
'இதயங்களை இணைப்போம்' மாநாட்டில் உரையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின் விவசாயிகளுக்கு பாஜக செய்துள்ள அநீதிகளைத் தட்டி கேட்க முடியாத முதலமைச்சர், தன்னை விவசாயி என்று சொல்லிகொள்கிறார். பச்சைத் துண்டு போட்டுக்கொண்டால் விவசாயி ஆகிட முடியுமா?" என்றார்.