கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது அத்தியாவசியத் தேவைகள், மருத்துவத் தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும் என்றும் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், தடை உத்தரவை மீறுபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குகள் பதிவு செய்து அவர்களைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.