சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து மதுரை மற்றும் ஆந்திர மாநிலத்தின் கர்னூல் இடையே இயக்கப்படும் 4 விமானங்கள், போதியப் பயணிகள் இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டன.
இன்று பகல் 1:10 மணிக்குப் புறப்பட்டு, ஆந்திர மாநிலம், கர்னூல் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மற்றும் இன்று மாலை 5:10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.
அதேபோல் ஆந்திர மாநிலம் கர்னூலில் இருந்து இன்று மாலை 3:10 மணிக்குப் புறப்பட்டு சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மற்றும் இன்று இரவு 7 மணிக்கு, மதுரையிலிருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது. இன்று ஒரே நாளில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் 4 இண்டிகா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இதையும் படிங்க: 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த ஐடி ஊழியர்... காரணம் என்ன?