தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்! - தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும்

சென்னை: அடுத்த நான்கு நாட்களில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார்.

heavy rain

By

Published : Oct 19, 2019, 4:23 PM IST

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், "கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை, பரவலாகவும் பெரும்பாலான இடங்களில் மிதமாகவும் பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 13 செ.மீ., திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அடுத்துவரும் இரண்டு தினங்களில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். கனமழை பொருத்தவரையில் குமரி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, தேனி, நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த வடகிழக்கு பருவமழையின் மழை நிலவரப்படி அடுத்துவரும் நான்கு நாட்களுக்கு மழை தொடரும்.

கேரளா, கர்நாடகா, மத்திய கிழக்கு, அரபிக் கடல் பகுதிகளுக்கு 19, 20, 21 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்றார்.

இதையும் படிங்க: 23ஆம் தேதி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details