கரோனா காரணமாக வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களைச் சொந்த நாடு அழைத்துவருவதற்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. அப்படி இயக்கப்படும் சிறப்பு விமானங்களில் அதிகளவிலான கடத்தல் சம்பவங்களும் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் துபாயிலிருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் பயணித்த பயணிகளை சுங்கத் துறையினர் சோதனை செய்தனர். அதில் ஒருவர் தனது உள்ளாடைக்குள் மறைத்து 412 கிராம் அளவிலான தங்கத்தை கடத்திவந்தது தெரியவந்தது.
மேலும் அவரது உடமைகளை சோதனை செய்தபோது, ரூ.30 லட்சம் மதிப்புள்ள ட்ரோன்கள், 2 ஐபோன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சுங்கத் துறையினரால் பறிமுதல்செய்யப்பட்ட கடத்தல் பொருட்கள் இதையடுத்து அவரை கைதுசெய்த காவல் துறையினர், கடத்திவரப்பட்ட பொருட்களையும் பறிமுதல்செய்தனர். இதேபோல் குவைத், தோஹா பகுதிகளிலிருந்து வந்த விமானங்களில் பயணிகளை சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது ஆந்திராவைச் சேர்ந்த இருவர், விருதுநகரைச் சேர்ந்த ஒருவர் என மூவர் இணைந்து 586 கிராம் அளவிலான தங்கத்தை கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.30.6 லட்சமாகும். இதையடுத்து மூவரையும் கைதுசெய்த சுங்கத் துறையினர், அவர்களிமிருந்த தங்கத்தைப் பறிமுதல்செய்தனர்.
இதையும் படிங்க:பெற்றோரிடமிருந்து மனைவியை மீட்டுத் தரக்கோரி காதல் கணவன் புகார்!