தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துபாயிலிருந்து சென்னை வந்த 44 பேருக்கு கோவிட்-19 தொற்று அறிகுறி - corona news

சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த பயணிகளில் 44 பேருக்கு கோவிட்-19 அறிகுறி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.

கோவிட்-19 தொற்று அறிகுறி
கோவிட்-19 தொற்று அறிகுறி

By

Published : Mar 18, 2020, 11:43 AM IST

துபாய், அபுதாபியிலிருந்து இன்று அதிகாலை சென்னைக்கு வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானப்பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்தப் பரிசோதனையில் 5 பெண்கள் உள்பட 44 பயணிகளுக்கு காய்ச்சல், சளித் தொல்லை, சுவாசிப்பதில் சிரமம் ஆகிய பிரச்னைகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மருத்துவக் குழுவினர், அவர்களை விமான நிலையத்திலேயே, ஒரு அறையில் தனிமைப்படுத்தினா்.

மீண்டும், மருத்துவப் சோதனை செய்யப்பட்டு 24 மணி நேர தீவிர கண்காணிப்பிற்காக சிறப்பு மருத்துவமுகாமில் சேர்க்க முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, ஐந்து ஆம்புலன்சுகளில் ஒரு பெண் உள்பட 24 பேரை பூந்தமல்லி சிறப்பு மருத்துவமுகாமிற்கு அனுப்பி வைத்தனர். மீதமுள்ளவர்கள் மூன்று ஆம்புலன்சுகளில் தாம்பரம் சானடோரியத்தில் புதிதாக திறக்கப்பட்ட சிறப்பு மருத்துவமுகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ஒரு நாள் கண்காணிப்பிற்கு பின்பு, பாதிப்பு இல்லாதவா்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள், அந்தந்த பகுதிகளிலுள்ள பொது சுகாதாரத்துறையினரின் தொடா் கண்காணிப்பில் 14 நாட்கள் இருக்க வேண்டும் எனக்கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கரோனா எதிரொலி: சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் அதிரடி உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details