தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி தோழனை தேடி வந்த மாஜி துணை ஜனாதிபதி.. சென்னையில் நடந்தது என்ன?

பள்ளியில் உடன் படித்த நண்பரை தேடி முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னைக்கு வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி தோழனை தேடி வந்த மாஜி துணை ஜனாதிபதி.. சென்னையில் நடந்தது என்ன?
பள்ளி தோழனை தேடி வந்த மாஜி துணை ஜனாதிபதி.. சென்னையில் நடந்தது என்ன?

By

Published : Nov 8, 2022, 2:36 PM IST

Updated : Nov 8, 2022, 3:22 PM IST

சென்னை:முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நவம்பர் 6-ம் தேதி ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியில் இருந்து ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் வந்தடைந்தார். வெங்கையா நாயுடு வருகையையொட்டி ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனது பள்ளி கால நண்பர் நர்சா ரெட்டியின் இல்லத்திற்கு சென்ற வெங்கையா நாயுடு சுமார் ஒருமணி நேரம் நண்பருடன் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

பள்ளி தோழனை தேடி வந்த மாஜி துணை ஜனாதிபதி.. சென்னையில் நடந்தது என்ன?

இதுகுறித்து நர்சா ரெட்டி நம்மிடம் பேசியதாவது, ”சிறுவயதில் ஒரே பள்ளியில் படித்தோம். வெங்கையா நாயுடு அவர்கள் எனக்கு ஒரு நல்ல நண்பர். அமைச்சர், துணை ஜனாதிபதி என்று எந்த பொறுப்பில் இருந்த போதும் நண்பர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பார். அதுமட்டுமின்றி ஆண்டுக்கு ஒருமுறை விசாகப்பட்டினத்தில் நண்பர்களை சந்தித்து பேசுவார்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இதையும் படிங்க:3 பேரை கடித்த கரடி உயிரிழப்பு ... உடற்கூறாய்வுக்குப் பின் வனப்பகுதியில் தகனம்

Last Updated : Nov 8, 2022, 3:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details