சென்னை: கரோனா தொற்றால் தனிநபர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதைப் போல மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சரிவு கண்டுள்ளது. மாநிலத்தின் வரி வருவாய் குறைந்துள்ளது.
இதனைச் சீராக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் மாநிலத்தின் பொருளாதாரம் குறித்து மு.க. ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்க ஐந்து பேர் அடங்கிய குழு ஜூன் 21ஆம் தேதி அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஆய்வாளர் எஸ்தர் டஃப்லோ, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் தலைமை பொருளாதார முன்னாள்ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம், மத்திய அரசின் நிதித் துறை முன்னாள்செயலர் டாக்டர் எஸ். நாராயணன், டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்னாமிக், ராஞ்சி பல்கலைக்கழக பேராசிரியர் ஜீன் ட்ரெஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற