தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நில அபகரிப்பு விவகாரம் - கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது

பல்லாவரம் அருகே 5 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை அபகரிக்க நில உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 6, 2022, 6:13 PM IST

சென்னை:திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் குபேர நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷினி (28). இவர், தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ஜமீன் பல்லாவரம் சிவசக்தி அவென்யூவில் தங்களுக்குச் சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நான்கரை கிரவுண்டு நிலத்தை 20 வருடங்களுக்கு முன் விலைக்கு வாங்கி சுற்றுச்சுவர் கட்டி பராமரித்து வந்தோம். இந்த நிலையில் கீழ்கட்டளை வேலுச்சாமி நகர் மெயின் ரோட்டில் வசித்து வரும் ஏழுமலை (55) என்பவர் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் சுற்றுச்சுசரை இடித்து வேறு ஒரு இரும்பு கேட்டை வைத்து உரிமையாளர் எங்களை அங்கு செல்லாதவாறு தடுத்து வருகிறார்.

நிலத்தில் நடப்பட்டிருந்த தூண்களையும் உடைத்து சேதப்படுத்தி விட்டார். இதையறிந்து நேரில் சென்று ஏழுமலையிடம் கேட்டபோது எங்களை தகாத வல்வார்த்தியால் திட்டியதோடு நிலத்தை கேட்டு மீண்டும் வந்தால் உயிரோடு விடமாட்டேன் எனவும் மிரட்டியதாகவும் புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து புகார் தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பெயரில் பல்லாவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருந்தனர். அப்போது, திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சி அருகேவுள்ள வல்லம் ஊராட்சியில் முன்னாள் தலைவராக ஏழுமலை இருந்ததும், கீழ்கட்டளையில் திருமண மண்டபம் நடத்தியதும் தெரியவந்தது.

இதற்கிடையே திருமணம் மண்டபத்திற்கு அருகில் உள்ள இடத்தையும் நில உரிமையாளர்கள் அனுமதி இல்லாமல் திருமண மண்டபத்திற்கு கார் பார்க்கிங்காக பயன்படுத்தியதும் நில உரிமையாளர்கள் இதை தட்டிக் கேட்டபோது அவர்களை மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் அஜர்ப்படுத்திய காவல் துறையினர், சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:திடீரென கவிழ்ந்த அரசுப்பேருந்து - 20க்கும் மேற்பட்டோர் காயம்

ABOUT THE AUTHOR

...view details