கரூர் மாவட்ட ஆட்சியரை தகாத வார்த்தைகளால் பேசியதாக அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முன்பிணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று (மே26) நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி, ”ஆட்சியரிடம் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியைப் பயன்படுத்தக்கோரி செந்தில் பாலாஜி மனு அளித்தார். ஆனால், அவரை ஆய்வு கூட்டத்திற்கு அழைக்காமல் ஆட்சியர் கூட்டம் நடத்தியுள்ளார்.