தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அம்மா உணவகத்தின் செயல்பாட்டை மறைக்காதவிதமாக கலைஞர் உணவகத்தைச் செயல்படுத்துங்கள்!' - அம்மா உணவகத்தின் செயல்பாட்டை மறைக்காத விதமாக இந்த கலைஞர் உணவகம்

கலைஞர் உணவகம் என்ற அரசின் முடிவை வரவேற்று வாழ்த்துவதாகவும், அதே நேரம், அம்மா உணவகத்தின் செயல்பாட்டை மறைக்காதவிதமாக இந்த கலைஞர் உணவகங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றும் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

By

Published : Nov 27, 2021, 6:54 AM IST

மதுரை: அதிமுக சார்பில் மதுரை மாநகரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களிடம் விருப்ப மனுக்களை நேற்று (நவம்பர் 26) அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பெற்றார்.

அதன்பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "மதுரை மாநகராட்சி, பறவை பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விருப்ப மனுவை இன்றுமுதல் (நவம்பர் 26) அளித்துவருகின்றனர். மதுரை மாவட்ட மக்கள் அதிமுகவிற்கு மாபெரும் வெற்றியை வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வழங்குவர்கள்.

அதிமுக கட்சியில் பலர் வருவார்கள், போவார்கள்

அதிமுகவைத் தமிழ்நாட்டில் எந்தச் சக்தியாலும் வெல்ல முடியாது" என்றார். அதிமுகவைச் சேர்ந்த சோழவந்தான் முன்னாள்எம்எல்ஏ மாணிக்கம் சமீபத்தில் பாஜகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு, "அதிமுக கட்சியில் பலர் வருவார்கள், போவார்கள். அது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை, கட்சியின் உயிர்த்துடிப்பு தொண்டர்கள்தான். வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெல்லும் என்று அண்ணாமலை கூறியிருப்பது அவரது ஆசை" என்றார்.


பணபலம், அதிகார பலம்

மேலும், "பணபலம், அதிகார பலம் ஆளும் கட்சிக்கு இருந்தாலும் மக்கள் பலத்தைக் கொண்டு, அதனை அதிமுக முறியடிக்கும். அதிமுக ஆட்சிக் காலத்தில் 5000 கோடி செலவில் மதுரையில் பல்வேறு சாலைகள், பாலங்கள் அமைக்கும் பணிகள், நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது, அதற்கான டெண்டர்களை ஆளும் அரசு ரத்துசெய்தது. இதனால் பல்வேறு பணிகள் பாதியிலேயே நிற்கின்றன. இதன் காரணமாக தற்போது மதுரை சாலைகளில் மழைநீர் தேங்கும் சூழல் உருவாகி உள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
பொங்கல் பண்டிகைக்குப் பணம்

ஆளும் கட்சியினர் எங்கள் திட்டத்தைக் குறை சொல்ல முடியாததால் தொடர்ந்து ஊழல் என்று கூறிவருகின்றனர். பொங்கல் பண்டிகைக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம், எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை மனத்தில் வைத்து ஆளும் அரசின் கருத்தும் மாறும்" என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு குறைக்க வேண்டும்

மேலும், அவர் கூறுகையில், "ஆளும் அரசின் நிர்வாகத்தில் மெத்தனப்போக்கு தொடர்வதைக் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியின் போராட்டம் குறிக்கிறது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

எளிய மனிதர்களுக்கு உணவு வழங்கும் இடம்
எளிய மனிதர்களுக்கு உணவு வழங்கும் இடம்

அம்மா உணவகங்கள் போல கலைஞர் உணவகங்கள் அமைக்க உள்ளதாக உணவுத் துறை அமைச்சர் தெரிவித்து இருப்பதற்கு, "அம்மா உணவகம் பல்வேறு எளிய மனிதர்களுக்கு உணவு வழங்கும் இடமாக இருந்தது. கரோனா காலகட்டத்தில் பலர் அம்மா உணவகத்தை நம்பி இருந்தனர்.

இதனால், தமிழ்நாடு முழுவதும் செயல்பட்ட அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டது. அந்த விதத்தில் இந்த கலைஞர் உணவகம் என்ற அரசின் முடிவை வரவேற்று வாழ்த்துகிறேன். அதே நேரம், அம்மா உணவகத்தின் செயல்பாட்டை மறைக்காதவிதமாக இந்த கலைஞர் உணவகங்களைச் செயல்படுத்த வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: கோடநாடு வழக்கு விசாரணை முக்கிய கட்டம்.. தனபால், ரமேஷுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details