தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

K T Rajendra Balaji arrested: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைதும் பின்னணியும்! - ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது

Former Minister K T Rajendra Balaji arrested: 3 கோடி ரூபாய் மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடகாவில் வைத்து தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது

By

Published : Jan 5, 2022, 3:22 PM IST

Updated : Jan 5, 2022, 7:41 PM IST

Former Minister K T Rajendra Balaji arrested: அதிமுக ஆட்சியின்போது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர், ராஜேந்திர பாலாஜி. இவர் அமைச்சராக இருந்த காலத்தில் ஆவின் உள்ளிட்ட அரசுத்துறைகளில் வேலை வாங்கித்தருவதாகக்கூறி, 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட காவல் துறையினருக்குப் புகார்கள் குவிந்தன.

புகாரின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீது காவல் துறையினர் மோசடி உள்ளிட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து ராஜேந்திர பாலாஜி முன்பிணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

விருதுநகர் காவல் துறையினர் 8 தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்து வந்த ராஜேந்திர பாலாஜியைத் தேடி வந்தனர். குறிப்பாக கேரளா, கோவை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் தனிப்படையினர் முகாமிட்டு தீவிரமாகத் தேடி வந்தனர்.

ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய நபர்களின் செல்போன் எண்ணையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் வழியாக ராஜேந்திர பாலாஜி காரில் செல்வதாகக் கிடைத்த தகவலையடுத்து, பெங்களூரு சென்ற தனிப்படையினர் ராஜேந்திர பாலாஜியை, ஹாசன் நகரில் வைத்து கைது செய்தனர்.

தனிப்படையினர் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜியை விருதுநகர் மாவட்டத்திற்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தேசியக்கொடியை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

Last Updated : Jan 5, 2022, 7:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details