தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திறத்தல், போஸ் கொடுத்தல், ரிப்பீட்டு' - முதலமைச்சரை கலாய்த்த ஜெயக்குமார்! - ஜெயக்குமார்

'தினமும் ரிமோட் எடுப்பது, போஸ் கொடுப்பது ரிப்பீட்டு' என மாநாடு பட பாணியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பாடுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார்
செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார்

By

Published : Apr 18, 2022, 9:51 PM IST

சென்னை:நில அபகரிப்பு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்ற உத்தரவின்படி நான்காவது முறையாக இன்று (ஏப்.18) காலை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டுச் சென்றார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடும் இல்லை. காவல் துறையும் இல்லை.

சட்டவிரோதச் செயல்களை கண்டிக்காமல் தினமும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ரிமோட் எடுத்து திறக்க வேண்டியது, போஸ் கொடுக்க வேண்டியது ரிப்பீட்டு என்ற முறையில் அவரது செயல்பாடுகள் இருக்கிறது” என அவர் கிண்டலாக கூறினார்.

தொடர்ந்து, “அரசியல் அமைப்பு சட்டத்திலேயே கருத்து சுதந்திரம் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை. இளையராஜா அவருடைய கருத்தைச் சொல்லி இருக்கிறார். அது குறித்து என்னுடைய கருத்தைச் சொல்ல விரும்பவில்லை.

செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார்

அம்பேத்கர் - மோடி ஒப்பீடு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. அரசு அலுவலர்கள் திமுகவினர் சொல்வதை செய்யாதீர்கள். அப்படி செய்தால் கரூரில் 9 அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது போல செய்யப்படுவார்கள். பலிகடா ஆக்கப்படுவீர்கள்” என்றார்.

இதையும் படிங்க:இசைஞானிக்கு வேறுஞானம் இல்லை - ராஜ்கிரண் கருத்து

ABOUT THE AUTHOR

...view details