சென்னை:நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றஞ்சாட்டி திமுக பிரமுகரைத் தாக்கி, சட்டையை கழற்றி அவமானப்படுத்தியதற்காக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் உள்ளார்.
இந்த வழக்கில் ஜாமீன்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி அல்லி, தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது எனவும், கைதாகி சில நாள்களே ஆவதாலும், விசாரணை இன்னும் ஆரம்பகட்டத்தில் இருப்பதாலும் ஜாமீன் தரமுடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் “புகார் அளித்தவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உடலில் காயங்கள் இல்லை. அப்படி உள்ள நிலையில் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்தது தவறு. மருத்துவ அறிக்கையும் காயங்கள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.