சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிந்தனை சிற்பி சிங்காரவேலனின் 164ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "திமுக அரசில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தீக்குளிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. திமுக ஆட்சியில் மக்களின் கருத்து உரிமை பறிக்கப்படுகிறது. ஆட்சிக்கு வரும் முன்பு நான் முதலமைச்சரானால் தலைமை செயலகத்தில் நேரடியாக மக்கள் என்னை வந்து சந்திக்கலாம் என கூறிவிட்டு தற்போது வரையும் யாரையும் பார்க்கவிடாமல் தடுக்கின்றனர்.
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டது. அதிமுக இடைக்காலப் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்யும் கனிமொழிக்கு பழைய வரலாறு தெரியாது. பதவியை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டவர் கருணாநிதி. அதிமுக கூட்டணியில் அதிமுக ஆட்சியை கலைத்த இந்திரா காந்தியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்தவர் கருணாநிதி.