தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக, மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கரோனாவின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
கரோனா தொற்று தடுப்புப் பணியில் சுகாதாரத்துறையினர், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்டோர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் நிவாரண உதவி இந்த நிலையில் பத்திரிகை, ஊடகத்துறையினரைப் பாராட்டும் விதமாகவும், கவுரவிக்கும் வகையிலும் சென்னையில் உள்ள 100க்கும் மேற்பட்ட செய்தியாளர்களுக்கு 25 கிலோ அரிசி, எண்ணெய், பத்து வகையான காய்கறிகள் மற்றும் முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை அதிமுக முன்னாள் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துல் ரஹீம் வழங்கினார்.
மேலும் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கச் செல்லும் போது, விழிப்புணர்வோடும் உரிய பாதுகாப்போடும் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: குடும்ப அட்டைதாரர்களுக்கு 98 விழுக்காடு ரூ. 1000 வழங்கப்பட்டுள்ளது - முதலமைச்சர்