தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை: நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் குறித்து ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட புகாரில் கைதான ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

Former judge karnan condition bail granted, MHC order
Former judge karnan condition bail granted, MHC order

By

Published : Mar 23, 2021, 4:17 PM IST

சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி ஒய்வுபெற்ற சி.எஸ்.கர்ணன், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், அவர்களது குடும்பத்தினர், பெண் வழக்கறிஞர்கள், பெண் பணியாளர்கள் ஆகியோரை அவதூறாக பேசி பல வீடியோக்களை வெளியிட்டார்.

இது தொடர்பாக வழக்கறிஞர் தேவிகா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உள்ளிட்டோர் கொடுத்த புகாரில் கடந்த ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி சென்னை மாநகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இதையடுத்து இவர் தாக்கல் செய்த 10 ஜாமீன் மனுக்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தள்ளுபடியான நிலையில், நீதிபதி கர்ணன் மீண்டும் 10 ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்திருந்தார். அந்த ஜாமீன் மனுக்களை நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தபோது, தற்போதைய மற்றும் முன்னாள் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பற்றி அவதூறாக பேச மாட்டேன் என்றும், ஊடகம், பத்திரிகை, சமூக ஊடகம் என எதிலும் வீடியோ பதிவேற்றம் செய்ய மாட்டேன் என உத்தரவாதம் அளித்திருந்தார்.

அதனை ஏற்று இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி பாரதிதாசன், 10 வழக்குகளிலும் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும், நீதிபதி கர்ணனுக்கு சென்னையில் தங்கியிருக்க வேண்டும், சாட்சிகளை கலைக்கக் கூடாது, விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்தார். நிபந்தனைகளை மீறும்பட்சத்தில் ஜாமின் ரத்து செய்யப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details