தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ஜார்க்கண்ட் மாஜி CM - சென்னை மாவட்ட செய்திகள்

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபுசோரன், உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல் நலம் தேறவே தனி விமானம் மூலம் ஜார்க்கண்ட் அழைத்துச் செல்லப்பட்டார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 28, 2023, 6:26 PM IST

Updated : Feb 28, 2023, 6:33 PM IST

சென்னை: ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரன் (வயது 79) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 9ஆம் தேதி ராஞ்சி நகரில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்வதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் சிபு சோரனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்த பிறகு சென்னை மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பின்னர் சிபுசோரனை, ஜார்க்கண்ட் முதலமைச்சரும் அவரது மகனுமான ஹேமந்த் சோரன், தனி விமானம் மூலம் நேற்று ஜார்க்கண்ட் அழைத்துச் சென்றார்.

இதையும் படிங்க:மேயர் பிரியாவிடம் மன்னிப்புக்கேட்ட பாஜக உறுப்பினர் உமா ஆனந்த்!

Last Updated : Feb 28, 2023, 6:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details