சென்னை அண்ணா சாலையில் உள்ள மூன்ஸ் டெக்னாலஜி லிமிடெட் என்ற நிறுவனம் செயல்படுகிறது.
இதன் நிர்வாகி ஜான் தீபக். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்தார்.
அதில்’’ மும்பையில் செயல்படும் ஐ.எல் அண்ட் எப்.எஸ்., டிரான்ஸ்பர்ட்டேசன் நெட் ஒர்க்ஸ் இண்டியா லிமிடெட் என்ற நிறுவனத்தினர் கடன் பத்திரம் மூலம் 200 கோடி ரூபாய் பெற்றனர்.
இதற்கு, மாதம், ஒன்பது சதவீதம் வட்டி தருவதாக உறுதி அளித்தனர். ஆனால், அந்நிறுவனத்தின் தலைவராக இருந்த ஹரி சங்கர், இயக்குநர் ராம்சந்த் கருணாகரன் ஆகியோர் வட்டியுடன் கடனைத் திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்து விட்டனர்.
இவர்கள் மீது பொருளாதார குற்றப் பிரிவுக் காவல்துறையினர் வழக்குப்பதிந்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டது
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மேற்கண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படிப் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்தனர்.
அப்போது, குற்றம் சாட்டப்பட்டுள்ள ராம்சந்த் கருணாகரன், ஹரி சங்கர் ஆகியோர், சட்ட விரோதப் பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, மும்பை சிறையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ராம்சந்த் கருணாகரன், ஹரி சங்கர் ஆகியோர், 200 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது குறித்து, மஹாராஷ்டிரா மாநில சிறைத்துறைக்கு பொருளாதார குற்றப்பிரிவுக் காவலதுறையினர் கடிதம் எழுதினர்.
இதையடுத்து, மும்பை சென்ற காவல்துறையினர். கடந்த ஜனவரி 26ஆம் தேதி, ராம்சந்த் கருணாகரன், ஹரி சங்கர் ஆகியோரை கைது செய்து, சென்னை சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ஐ.எல் அண்ட் எப்.எஸ் டிரான்ஸ்பர்ட்டேசன் நெட் ஒர்க்ஸ் இண்டியா லிமிடெட் முன்னாள் தலைவரான ரவி பார்த்த சாரதிக்கு அமலாக்கத்துறை தொடர்பான விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது.
ரவி பார்த்தசாரதி மும்பையில் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து பொருளாதார குற்றப்பிரிவு தனிப்படை காவல்துறையினர், மும்பை சென்று ரவி பார்த்த சாரதியை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ரவி பார்த்தசாரதி சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: வழி நெடுக தோரணம் இல்லை, பேனர்கள் இல்லை..'