சென்னை: திருமலை பகுதியில் உள்ள சமண கோவில்களில் இருந்த சிலை பற்றி சென்னை மயிலாப்பூரில் நேற்று (ஆகஸ்ட் 14) செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் காவல் துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் பேசுகையில், "தமிழநாட்டை சேர்ந்த சுமார் 2,500 வருடங்கள் பழமையான திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் அருகில் இருக்கும் வைகாவூர் திருமலை பகுதியில், உள்ள சமண கோவில்களில் இருந்த சிலை திருடப்பட்டு தற்போது அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
இந்த சிலை திருட்டில் தொடர்பு உடைய சுபாஷ் சந்திர கபூர் மற்றும் இந்த திருட்டில் தொடர்புடைய ஒன்பது சதவீத குற்றவாளிகள் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்கள் மேல் இன்று வரை தமிழக காவல்துறையினர் மற்றும் சிலை கடத்தால் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த, 1959 ஆண்டு சட்டப்படி தமிழக சமண மத கோயில்கள் அனைத்தும் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இந்த சமண கோயிலுக்கு சொந்தமான சிலையை மீட்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதால் விசாரிப்பதில் சரிவர செயல்படுவது இல்லை.
இதையும் படிங்க:சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதம் - தியாகியின் மனைவி அறிவிப்பு