முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் சந்தோஷ் பாபு, கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். பாஜக, காங்கிரஸ் கட்சியில் அண்மையில், சில ஐஏஎஸ் அலுவலர்கள் இணைந்த நிலையில், தற்போது மக்கள் நீதி மய்யத்திலும் ஐஏஎஸ் ஒருவர் இணைந்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தில் ஐக்கியமான முன்னாள் ஐஏஎஸ் சந்தோஷ் பாபு - கமல்ஹாசன்
முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் சந்தோஷ் பாபு, கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இன்று இணைந்தார்.
மக்கள் நீதி மய்யத்தில் ஐக்கியமான முன்னாள் ஐஏஎஸ் சந்தோஷ் பாபு
இவரை, அக்கட்சியின் தலைமை அலுவலக பொதுச்செயலாளராக மக்கள் நீதி மய்யம் நியமித்துள்ளது. கிருஷ்ணகிரி, சிவகங்கை மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றிய சந்தோஷ் பாபு, பாரத் நெட் விவகாரத்தில் விருப்ப ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மநீம-வைக் கண்டு பயப்படும் அதிமுக- டாக்டர் மகேந்திரன்
Last Updated : Dec 1, 2020, 12:30 PM IST