தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடுப்பூசி போட்டுக்கொண்ட விஜயபாஸ்கருக்கு கரோனா - latest chennai news

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

By

Published : May 7, 2021, 8:54 AM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கரோனாவை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டாலும், அதன் தாக்கம் இன்னும் குறைந்த பாடில்லை. கரோனாவின் பிடியில் அரசு அலுவலர்கள், முன்களப் பணியாளர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

விஜயபாஸ்கருக்கு கரோனா

இந்நிலையில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினருமான விஜயபாஸ்கருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ”எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக விஜயபாஸ்கர் கடந்த ஜனவரி மாதம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details