"தமிழ் சமூகத்தை பிரதிபலிக்கும் எழுத்தாளர் இமையம்" - முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ணன் காந்தி பாராட்டு சென்னை: சென்னை பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறை சார்பில் "குவெம்பு தேசிய விருது, சாகித்ய அகாதெமி விருது" பெற்ற புனை கதையாளர் இமையம் என்ற ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் 11 பேச்சாளர்கள் குறிப்பாக கோபாலகிருஷ்ணன் காந்தி உள்ளிட்டோர் எழுத்தாளர் இமையத்தின் நாவல்களையும் அவருடைய சமூக சிந்தனைகளையும் குறித்து பெருமிதமாக பேசினர்.
மேடையில் பேசிய கோபாலகிருஷ்ணன் காந்தி, "எழுத்தாளர் இமையம் பல நாவல்கள் எழுதியிருந்தாலும், அவர் எழுதிய 'செல்லாத பணத்தை' முழுமையாக படித்து இப்போது அதைப்பற்றி மட்டும் தான் பேச விரும்புகிறேன் என்றார். அந்த செல்லாத பணம் என்பது நடுக்கம் என்பதற்கும் பயம் என்பதற்கும் என்ன வித்தியாசம்? தீ என்பதற்கும் நெருப்பு என்பதற்கும் வித்தியாசம் என்ன?.
மேலும், ஒரு மருத்துவமனையில் தனிப்பிரிவில் உள்ளநோயாளியும், நோயாளிக்கு வெளியே இருக்க கூடிய குடும்பத்தாருக்குமான ஒரு தத்தளிப்பு. இந்த இரண்டு தத்தளிப்புகளும் எப்படி ஒன்றிமைக்கிறது அல்லது சந்திக்கிறது. இந்த துயரம் என்ன? என்பதை செல்லாத பணம் என்ற நாவலில் படித்திருக்கிறேன் என்றும், 'ஆறுமுகம்' என்ற நாவல் மனித உறவுகளுக்கு இடையில் உள்ள சிக்கல்கள் குறித்து இமையம் எழுதியுள்ளார் இந்த அளவுக்கு தமிழ் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதில் பெருமைப்படுகிறேன்" என கூறினார்.
எழுத்தாளர் இமையம் ஈடிவி பாரத்திற்கு அளித்த, பிரத்யேக பேட்டி:"மொழி என்பது சென்னையின் மொழி வேறு, தென் தமிழ்நாட்டின் மொழி வேறு, நான் வாழக்கூடிய கடலூர் மாவட்டத்தின் மொழி வேறு. கடலூர் மாவட்டத்தின் மொழியை என்னுடைய இலக்கிய படைப்புகளில் எவ்வாறு பதிவு செய்திருக்கிறேன். ஒருவர் மொழி குறித்து பேசுகிறார். இன்னொருவர் இலக்கிய நடை குறித்து பேசுகிறார்.
ஒருவர் என்னுடைய கதை கட்டமைப்பு குறித்து பேசுகிறார். இந்த கதைகள் இந்த சமூகத்தோடு எவ்வாறு உறவு கொள்கிறது. மேலும் நிகழ்கால சமூகத்தை இந்த எழுத்தாளர் எவ்வாறு எழுதியிருக்கிறார். இன்று தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களில் இமையம் என்ற எழுத்தாளர் எவ்வாறு மேலேறிருக்கிறார். அல்லது கீழே இறங்கியிருக்கிறாரா? இந்த 27 ஆண்டு கால இலக்கிய, எழுத்து வாழ்க்கையில் அவருடைய எழுத்து என்னென்ன விதமான பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அந்த பரிசோதனை முயற்சிகள் உலக இலக்கியத்தில் எந்த விதத்தில் பொருந்தி போகிறது.
உலக இலக்கியமும், தமிழ் இலக்கியமும் சங்கமிக்கக்கூடிய, சந்திக்கக்கூடிய புள்ளி. தமிழ் இலக்கியத்தை மொழி பெயர்க்கும்போது அது உலக இலக்கிய மார்க்கெட்டில் என்னவாக மதிக்கப்படுகிறது. இந்த எழுத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதற்கு இந்த ஒரு நாள் தேசிய கருத்தரங்கு உதவும் என்றார்.
இதையும் படிங்க:Group 4 Results 2022:குரூப் 4 முடிவுகள் எப்போது?.. டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!