தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 17, 2021, 10:55 AM IST

Updated : May 17, 2021, 2:38 PM IST

ETV Bharat / state

துளசி வாண்டையார் காலமானார்

சுதந்திரப் போராட்ட வீரரும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.,யுமான கே.துளசி வாண்டையார் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93.

துளசி வாண்டையார் காலமானார்
துளசி வாண்டையார் காலமானார்

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வந்த முதுபெரும் காங்கிரஸ் தலைவரான கே. துளசி வாண்டையார் இன்று (மே.17) காலையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவரது உடல் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் பூண்டிக்கு சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு இறுதி சடங்கு செய்யப்படுகிறது. தீவிர காந்திய பற்றாளரான துளசி வாண்டையார், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களில் குறிப்பிடத்தக்கவர்.

துளசி வாண்டையார்

1991ஆம் ஆண்டில் இருந்து 1996 வரை தஞ்சாவூர் மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி புஷ்பம் கல்லூரி தாளாளர் ஆவார்.

இதையும் படிங்க: ‘வட்டார மருத்துவ அலுவலரை இடம் மாற்ற வேண்டும்’: எம்எல்ஏவிடம் பொதுமக்கள் வேண்டுகோள்!

Last Updated : May 17, 2021, 2:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details