தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயலலிதா மரணம் - இபிஎஸின் நிலைபாடு என்ன? - புகழேந்தி கேள்வி - அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கேள்வி

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நிலைபாடு என்ன என்பது குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம்- இபிஎஸின் நிலைபாடு என்ன?
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம்- இபிஎஸின் நிலைபாடு என்ன?

By

Published : Apr 20, 2022, 6:55 AM IST

சென்னை:ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் கடந்த மாதம் 200 பக்க மனுவை புகழேந்தி வழங்கினார். அதனைத் தொடர்ந்து, நீதிபதி ஆறுமுகசாமி முன்பு நேற்று (ஏப்ரல்19)ஆஜராகிய நிலையில், வரும் செவ்வாய்க்கிழமை ஆஜராகும்படி நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா 72 நாட்கள் சிகிச்சையில் இருந்த போது காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பான கூட்டம் 2 மணி நேரம் நடைபெற்றது.

அப்பொழுது, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த கூட்டத்தில் பங்கேற்றாரா? அவரது நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும். இதே போன்று, முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஜெயலலிதாவிற்கு வெளிநாட்டு சிகிச்சை தேவைப்படவில்லை - அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலம்!

ABOUT THE AUTHOR

...view details