சென்னைமெரினா காமராஜர் சாலையிலுள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள, அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறையின் செயலாளர் மகேஷன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெயசீலன் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜனும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, “ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மரியாதை செலுத்தியதில் பெருமை கொள்கிறேன்.