தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் வழக்கு: இன்று தீர்ப்பு! - Former aiadmk minister

திருமணம் செய்வதாகக் கூறி, தன்னை ஏமாற்றியதாக நடிகை அளித்த புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜூன்.25ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

manikandan bail
manikandan bail

By

Published : Jun 24, 2021, 5:43 PM IST

Updated : Jun 25, 2021, 7:07 AM IST

சென்னை:அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்வதாகக் கூறி, தன்னை ஏமாற்றியதோடு, கட்டாய கருக்கலைப்பு செய்ததாக நடிகை அளித்த புகாரின்பேரில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம், ஜூன் 16ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல்துறையினர் ஜூன் 20 ஆம் தேதி கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில், தனக்கு ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மணிகண்டன் தரப்பில் நடிகையை காயப்படுத்தியதாகக் கூறுவதற்கும், தன்னுடன் பழகிய சில நாட்களிலேயே கர்ப்பமானார் என்று கூறுவதற்கும் ஆதாரங்கள் இல்லை என்றும், முதல் கட்ட விசாரணையை முழுமையாக முடிக்காமலும், தன்னிடம் விளக்கம் பெறாமலும், காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிடப்பட்டது

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் இ.ஜெய்சங்கர், காவல்துறையின் அறிக்கையை தாக்கல் செய்தார். தன்னை விட்டுப் போகக் கூடாது என, நடிகைக்கு வாட்ஸ்அப்பில் மிரட்டல் விடுத்தது, தன்னுடைய வாட்ஸ்-அப்பில் இருந்து நடிகைக்குப் புகைப்படங்கள் அனுப்பியது, இருவரும் ஒன்றாக தங்கியிருந்தது தொடர்பாக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, சாட்சிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகத் தெரிவித்தார்.

எனவே மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதால் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் வாதிடப்பட்டது.

தொடர்ந்து புகார்தாரரான நடிகை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்குவதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஜூன். 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Last Updated : Jun 25, 2021, 7:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details