சென்னை:முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவருக்குச் சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். சோதனையில், அவர் 55 விழுக்காடு அதிகமாக சொத்துகள் சேர்த்தது அம்பலமானது.
2016ஆம் ஆண்டு தேர்தலின் வேட்புமனு தாக்கல் செய்தபோது, தன்னிடம் 2 கோடிய 51 லட்சத்து 91ஆயிரத்து 378 ரூபாய் சொத்து இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், 8 கோடி 62லட்சத்து 35 ஆயிரத்து 648 ரூபாய் சொத்து மதிப்பு உள்ளதாக வேட்புமனுத் தாக்கலில் குறிப்பிட்டிருந்தார்.
சொத்து மதிப்பு 55 விழுக்காடு உயர்வு
அமைச்சராக இருந்த காலகட்டத்தில் 6 கோடிய 10 லட்சத்து 44ஆயிரத்து 270 ரூபாய் சொத்துக்களாக சேர்த்துள்ளார். 4 கோடிய 91 லட்சத்து 78 ஆயிரத்து 366 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த கால கட்டத்தில் செலவினங்கள் 1 கோடிய 49 லட்சத்து 72ஆயிரத்து 583 மட்டுமே இருப்பது தெரியவந்தது.