தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம்; சட்டத் திருத்த மசோதா அறிமுகம் - சட்டத் திருத்த மசோதா அறிமுகம்

போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் பதிவு செய்யப்பட்ட சொத்துக்களை பதிவாளர், பதிவுத்துறை தலைவர் ரத்து செய்வதற்கு அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா சட்டப் பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

சட்டத் திருத்த மசோதா அறிமுகம்
சட்டத் திருத்த மசோதா அறிமுகம்

By

Published : Sep 2, 2021, 5:40 PM IST

சென்னை: 1908 ஆம் ஆண்டு பதிவு சட்டத்தை தமிழ்நாடு மாநிலத்திற்கு பொருந்தும் வகையிலும், திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி சட்டப்பேரவையில் இன்று (செப்.2) தாக்கல் செய்தார்.

இந்தச் சட்ட மசோதாவில், “ஆவணங்களின் மோசடி பதிவுகளை குறைப்பதற்கு அரசால் முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், உண்மை நில உரிமையாளர்களுக்கு துன்பம் விளைவிக்கும் வகையில் போலி ஆவணங்கள் மூலம் சொத்து பதிவு நடைபெறுகிறது என அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்படும் சொத்துக்களை ரத்து செய்வதற்கான அதிகாரம் பதிவு செய்யும் அலுவலர், பிற அதிகார அமைப்புக்கு இல்லாத சூழல் இதுவரை இருந்து வந்தது.

எனவே போலியான ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் பதிவு செய்யப்படும் சொத்துக்களை பதிவாளர் மற்றும் பத்திரப் பதிவு தலைவர் ரத்து செய்வதற்கு அதிகாரம் வழங்கும் வகையில் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் படி மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கோடநாடு திக் திக்: அக்டோபர் 1இல் விசாரணை; களத்தில் தனிப்படை!

ABOUT THE AUTHOR

...view details