தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வன விரிவாக்க மையங்கள் அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில், தற்போது வனவிரிவாக்க மையங்கள் கோவை, நாமக்கல், கரூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், தருமபுரி, விருதுநகர், சென்னை ஆகிய நகரங்களில் அமைக்க இரண்டு கோடியே நான்கு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளிட்டார்.
அதில், "வனவிரிவாக்க மையத்தில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படும். நவீன தொழில்நுட்பத்தைக் கையாண்டு சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகளை விவசாயிகளுக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையாக இது அமையும்.
தேவையின் அடிப்படையில் நாற்றாங்கால் உற்பத்தி செய்யவும் வன விரிவாக்க மையங்களை நவீனப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குன்னூரில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த வன விலங்குகளின் ஓவியம்!