சர்வதேச வங்கி மோசடி; சென்னையில் பல்கேரியா இளைஞர்கள் கைது! - பல்கேரியா இளைஞர்கள் கைது
சென்னை: சர்வதேச வங்கி மோசடியில் ஈடுபட்ட பல்கேரியா நாட்டைச் சேர்ந்த இருவர், செம்மஞ்சேரி காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

foreigners arrest
பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர்களான பீட்டர் வேலிக்கோ, லயன் மார்க்கோவா ஆகியோர் சர்வதேச வங்கிகளில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இங்கிலாந்து உட்பட பல சர்வதேச நாடுகளின் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கிரடிட் கார்டுகளின் தகவல்களைத் திருடி இந்தியாவில் பல இடங்களில் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், சென்னையில் கடந்த ஒரு மாதமாக வங்கி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், இருவரையும் சென்னை காவல்துறையினர் நேற்று கைது செய்து, மத்திய குற்றப்பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.