தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாட்டு பெண்ணுக்கு குறுஞ்செய்தி - விடுதி மேலாளர் மீது புகார்! - வெளிநாட்டு பெண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்த ஹோட்டல் மேலாளர் மீது புகார்

சென்னை: குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்ததாகக் கூறி ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், விடுதி மேலாளர் மீது கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு
குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு

By

Published : Jan 29, 2020, 1:41 PM IST

ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் லெட்சியா (29) என்பவர், சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் விடுதியில் கடந்த ஒரு வருடமாக தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த விடுதியின் பொதுமேலாளர் ரவி என்பவர், லெட்சியாவின் செல்ஃபோன் எண்ணிற்கு தவறான எண்ணத்தில் குறுஞ்செய்தி அனுப்பி, தினமும் தொந்தரவு செய்துவந்தார். இதனால், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் லெட்சியா புகார் அளித்துள்ளார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டு பெண் தங்கியிருந்த விடுதி

இதையும் படிங்க: சாக்லெட் கொடுத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; இளைஞருக்கு வலைவீச்சு!

For All Latest Updates

TAGGED:

Foreign lady

ABOUT THE AUTHOR

...view details