செவிலியர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட் பணிகளுக்கு 35 வயதுக்குட்பட்ட இரண்டு ஆண்டு பணி அனுபவம் கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். 40 வயதுக்குட்பட்ட பெண் லேப் டெக்னீஷியன், எக்ஸ்ரே, சோனோகிராபி டெக்னீஷியன்கள் விண்ணப்பிக்கலாம்.
சவுதி அரேபியாவில் மருத்துவத்துறையினருக்கு அரிய வாய்ப்பு! - சவுதி அரேபியா
சவுதி அரேபியா நாட்டில் உள்ள முன்னணி மருத்துவமனைக்கு செவிலியர்கள், பிசியோதெரபிஸ்ட், மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் எம்.டி தேர்ச்சி பெற்ற 60 வயதுடைய ஆண், பெண் மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அனுபவத்துக்கு ஏற்றவாறு மாத ஊதியம், இலவச விமான டிக்கெட், உணவு, இருப்பிடம், விசா, மருத்துவ சலுகை, அந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட இதர சலுகை உள்ளிட்டவை வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் ovemclsn@gmail.com என்ற முகவரிக்கு சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 -22505886/ 22500417 என்ற எண்களிலும், www.omcmanpower.com என்ற இணையதள முகவரியிலும் அணுகலாம்.