சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று (மார்ச் 30) சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரானது. அதில் பயணிக்க வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அலுவலர்கள் கண்காணித்து சந்தேகப்பட்ட பயணிகளை சோதனையிட்டு அனுப்பி கொண்டிருந்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த 4 ஆண்கள் ஒரு குழுவாக துபாய்க்கு செல்ல வந்திருந்தனர். அவர்களுடைய நடவடிக்கைகள் அலுவலர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த பயணிகளின் உடைமைகளை முழுமையாக சோதித்தனர். அதில் எதுவுமில்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல் 4 பயணிகளையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதித்தனர்.
அப்போது அவா்களின் உள்ளாடைகளுக்குள், கட்டு கட்டாக அமெரிக்க டாலர், யூரோ, கரன்சி உள்ளிட்டவை மறைத்து வைத்திருப்பதை கண்டு பிடித்தனா். இதையடுத்து அதனை பறிமுதல் செய்தனர்.