சென்னை: இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,"அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு நிறுவனம், தனது உற்பத்திப் பிரிவை இந்தியாவில் சென்னையில் நிறுவி உற்பத்தி செய்துவந்தது.
பின்னர் அதன் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு பிரிவை குஜராத்தில் தொடங்கியது. அதன்மூலம் தமிழ்நாட்டிலும் குஜராத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றிருந்தனர்.
கமல்ஹாசன் - பணியாளர்கள் சந்திப்பு
இந்நிலையில், அந்நிறுவனம் தனது இந்திய யூனிட்டுகளை மூடுவதாக அறிவித்தது. இதனால் ஏராளமானோர் வேலை பறிபோய் பாதிக்கப்படலாம் என கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நன்றி
அதற்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில், அந்நிறுவனத்தின் பணியாளர்கள் கமல்ஹாசனை சந்தித்தனர். அவர்களிடம் ஃபோர்டு நிறுவனத்தைத் தக்கவைக்க, தான் மேலும் முயல்வதாகக் கமல்ஹாசன் கூறினார்" என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க:மகிழ்ச்சி.. குடியரசுத் தலைவர், பிரதமர் சந்திப்பு குறித்து ரஜினிகாந்த்!