தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணம் செய்துகொள்ள பெற்றோர் வற்புறுத்தல் - இளம் பெண் தற்கொலை - தலைமை செயலக காலனி காவல்துறை

சென்னை: திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் மனமுடைந்த இளம் பெண், இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தல்:  இளம் பெண் தற்கொலை
திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தல்:  இளம் பெண் தற்கொலை

By

Published : Oct 31, 2020, 7:52 AM IST

சென்னை நம்மாழ்வார் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் யாமினி (25) தனியார் கல்லூரியில் பி.காம் படித்துவிட்டு மவுண்ட் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி யாமினியின் திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்த்துவிட்டதாக தாய் தர்சாயினி யாமினியிடம் தெரிவித்துள்ளார். அதற்கு தற்போது திருமணம் வேண்டாம் என யாமினி கூறியதால் தாய் கண்டித்து திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த யாமினி உடனே வீட்டின் இரண்டாவது மாடியின் பால்கனியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்த நபர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாமினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலக காலனி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044- 2464 0050, மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104

ABOUT THE AUTHOR

...view details