சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில்,'மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பொழிவு இருக்கும். அடுத்த இரண்டு நாட்களில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து, டிசம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் மழைப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கன மழையும்; காஞ்சிபுரம், விழுப்புரம், புதுவை, ஈரோடு, கடலூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கன மழையும்; கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்' என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ' கடந்த 24 மணி நேரத்தில் 14 இடங்களில் மிக கன மழையும், 53 இடங்களிலும் கன மழையும் பதிவாகியுள்ளது.