சென்னை: குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுஜாதா(36) என்ற பெண் இதயக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் உடல் நிலை மிக மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது.
இந்த நிலையில் மதுரையில், சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த தமிழ்மணி(21) என்பவரின் இதயத்தை தானம் செய்வதற்கு, உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து மதுரை விமான நிலையத்திலுருந்து 50 நிமிடத்தில், தமிழ்மணியின் இதயம் சென்னை குரோம்பேட்டை கொண்டுவரப்பட்டது. பின் ரேலா மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் சிகிச்சை இயக்குநர் சந்தீப் அத்தாவர் தலைமையிலான மருத்துவர்கள், கடந்த 27ஆம் தேதி வெற்றிகரமாக அப்பெண்ணிற்குப் பொருத்தப்பட்டது.