தமிழ்நாடு

tamil nadu

தொடர்ந்து 5 வது ஆண்டாக முதலிடம் : சென்னை ஐஐடி சாதனை

By

Published : Jun 5, 2023, 6:25 PM IST

தேசிய சிறந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 5 வது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடமும், தமிழ்நாட்டில் இருந்து அண்ணா பல்கலைகழகம் 18 வது இடத்தை பிடித்துள்ளது.

தேசிய தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து  5 வது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.
தேசிய தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 5 வது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.

சென்னை: தேசிய சிறந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 5 வது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து அண்ணா பல்கலைகழகம் 18 வது இடத்தை பிடித்துள்ளது. கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசைப் பட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பல கல்லூரிகள் பட்டியலின் முன்னிலையில் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து மத்திய கல்வி அமைச்சகம் தேசிய தரவரிசை பட்டியலை பல்வேறு தரவுகளின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 18 கல்லூரிகள் மொத்த தரவரிசை பட்டியலின் முதல் 100 கல்லூரிகளில் இடம்பெற்றுள்ளன. அதில் இந்தியாவிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனம் என்று அந்தஸ்தை சென்னை ஐஐடி பெற்றுள்ளது.

சிறந்த பொறியியல் கல்வி நிறுவனம் என்று சென்னை ஐஐடி நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து எட்டாவது ஆண்டாக இந்த பிரிவில் சென்னை ஐஐடி முதலிடத்தை தக்க வைத்தள்ளது. தமிழ்நாட்டில் இருந்து அண்ணா பல்கலைகழகம் இந்தியா அளவில் 18 வது இடத்தை பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து, நாட்டிலேயே சிறந்த கல்லூரிகள் பிரிவில் சென்னை மாநிலக் கல்லூரி மூன்றாம் இடத்திலும், சென்னை லயோலா கல்லூரி 7ம் இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க:TN School Reopen: தமிழ்நாட்டில் ஜூன் 12-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!

மேலும், சிறந்த பல்கலைகழகம் என்ற பிரிவில் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் முதலிடத்திலும் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைகழகம் இரண்டாம் இடத்திலும்,டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைகழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது.பல்கலைகழகம் பிரிவில் அண்ணா பல்கலைகழகம் 14 வது இடத்தை பிடித்து பெருமை சேர்த்துள்ளது.

பின்னர், சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனம் என்ற பிரிவில் அகமதாபாத்தில் உள்ள கல்லூரி முதலிடத்தில் உள்ளது . இரண்டாம் இடத்தில் பெங்களூரில் உள்ள ஐ ஐ எம் நிறுவனமும், மூன்றாம் இடத்தில் கோழிக்கோட்டை சேர்ந்த ஐ ஐ எம் பிடித்துஉள்ளது என தரவரிசைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னிலையில், சிறந்த மருத்துவக்கல்லூரிகள் பட்டியலில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியும், 3 வது இடத்தில் வேலூர் கிருஸ்துவ மருத்துவக்கல்லூரியும், சென்னை மருத்துக்கல்லூரி 11 வது இடத்தையும் பெற்று அசத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள தேசிய சட்டப் பள்ளி சட்டக் கல்வி நிறுவனம் பிரிவில் முதலிடத்தில் உள்ளது . கட்டட மற்றும் வரைகலை கல்வி நிறுவனம் பிரிவில் திருச்சி என் ஐ டி முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

தேசிய சிறந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில் பல கல்வி நிறுவனங்கள் மத்தியில் முதல் 100 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 18 கல்லூரிகள் இடம் வகிக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க:குழந்தைகளுக்கு மருந்து மாற்றி கொடுததாக புகார்.. கோவில்பட்டி அரசு மருத்துவமனை விளக்கம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details